Wednesday, January 28, 2009

MLA - STOP Bt Brinjal Today!

பி.டி கத்திரியை தடுக்க உங்களால் முடிந்ததை
இன்றே செய்க ! நன்றே செய்க !


பெருமதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு:


மரபணு மாற்று உணவு என்பது கிருமிகளான பாக்ட்டீரியா வைரஸ் மற்றும் பூச்சிகள் போன்றவற்றின் மரபணுகளை எடுத்து அரிசி, சோளம் போன்ற தானியங்களிலும் கத்திரி உருளை போன்ற காய்கறிகளிளும் திணிக்கப்பட்டு உருவானதாகும்.


மரபணு மாற்று பயிர்கள்-உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும், மண் வளத்தினை அழிக்கும், சுற்றுச் சூழலை பாதிக்கும், விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும்.


மண்ணையும் மனிதனையும் மலடாக்கும் மரபணு மாற்றம்:

மரபணு மாற்ற உணவுகளை உட்கொண்ட சோதனை எலிகளுக்கு உள் உறுப்புகள் வளர்ச்சி பாதிப்பு, திசுக்கள் பாதிப்பு நோய் எதிர்புச் சக்தி குறைதல், ஒவ்வாமைப் பிரச்சிசினைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல்களில் நச்சுத்தன்மை,- இவை எல்லாவற்றுக்கும் மேலாக சமீபத்திய ஆய்வுகளில் கருவுறுவதிலும் மகப்பேற்றிலும் தீவிர பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 6 வருடங்களாக மரபணு மாற்ற பி.டி பருத்தியினால் விவசாயிகளுக்கு எந்த இலாபத்தையும் தர முடியவில்லை என்பதற்கு ஆண்டுதோறும் பெருகி வரும் பருத்தி விவசாயுகளின் தற்கொலைகளே சாட்சி. அது மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கில் ஆடு மாடுகள் ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஹரியானா என்று பல்வேறு இடங்களில் இறந்து போனதற்கும் பி.டி பருத்தியே காரணம் என பல கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.


முதலில் கத்திரி அடுத்து...

இத்தகைய ஆபத்தான மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரிசி, கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு, உளுந்து, துவரம்பருப்பு, கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பப்பாளி போனறு 41க்கும் மேலான உணவுப்பொருட்களில் 170க்கும் மேலான மரபணு மாற்ற ரகங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.


தமிழர்களுக்கு விருப்பமான கத்தரிக்காயில் மரபணு மாற்றம் விரைவில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. மான்சான்டோ நிறுவனத்தின் இந்திய கூட்டாளியான மஹிகோ, சந்தையில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் Bt கத்தரிக்காய் மனிதர்களுக்கு மிகவும் ஏற்றது என்று கூறி வருகிறது. ஆனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தனிப்பட்ட வல்லுனர்கள் இந்த ஆய்வு முடிவுகள் அனைத்தும் தவறானவை என்று நிரூபித்துள்ளனர். ஆயினும் மத்திய அரசு இதை விற்பனைக்கும் அனுமதிப்பதில் முனைப்போடு உள்ளது.

தமிழக வேளாண் பல்கலையா இல்லை மான்சாண்டோ கைக்கூலியா?

இத்தகைய ஆபத்தான பயிர்களை உருவாக்குவதிலும் அங்கீகரிப்பதிலும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மான்சான்டோ என்ற பன்னாட்டு பகாசுர நிறுவனத்தின் கைக்கூலி நிறுவனமாகவே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மாறிவிட்டது.


தமிழர்களின் பாரம்பரிய அறிவுச்சொத்தான பல இயற்கை தானியங்களை வளர்த்தெடுக்காமல், அவற்றை அழித்தொழிக்கும் நோக்கதோடு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழக வேளாண் பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு அவசியமான ஆய்வுகளை விடுத்து மான்சாண்டோவிற்கு இலவசமாக மரபணு மாற்ற விதைகளை பயிரிட்டு ஆய்வு செய்து வருகிறது. இது இன்று மட்டுமன்றி முன்னர் கத்திரிக்காய்க்கும் நடை பெற்றது. இது தொடர்ந்தால் பல்கலைகயும், மக்களின் வரிப்பணமும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டு ஒப்ப்ந்தப் ஆய்வுகமாகும் சூழ்நிலையில் உள்ளோம். இது உடனடியாக தடுக்கப்படவேண்டும்.


தமிழகம் மரபணு மாற்றத்தை தடை செய்ய வேண்டும்

தமிழகம், கேரள மாநிலம் போன்று வேளாண்மையில் தங்கள் உரிமையை நிலைநாட்டி மரபணு மாற்ற உணவுகளை தடை செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மை எல்லோர்க்கும் தேவையான உணவைக் கொடுப்பதுடன் மண்ணின் வளத்தையும் உழவனின் வாழ்வையும் காக்கும் தன்மை கொண்டது என்பதை உணர்ந்து தமிழக வேளாண் கொள்கையினை இயற்கை வேளாண் கொள்கையாக மாற்ற வேண்டும்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அங்கத்தினர்களாகிய மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வர்த்தகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விவசாயிகள், நுகர்வோர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரும் தாங்கள் கீழ்க்கண்ட வேண்டுகோள்களை ஏற்று அரசினை செயல்படுமாறு வலியுறுத்த வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்:

  • மரபணு மாற்று பயிர்களும், அவற்றின் கள ஆய்வுகளும் உடனடியாக தடைசெய்யப்பட/நிறுத்தப்பட வேண்டும்.
  • மரபணு மாற்று பயிர்கள் மீது நீண்டகால பாதுகாப்பு ஆய்வுகள் நடத்திய பின்னரே கள ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும்.
  • அரசின் வேளாண் பல்கலைக்கழகங்கள், தனியாருடன் இணைந்து மரபணு மாற்று சோதனை செய்வதை கைவிட வேண்டும்.
  • மருத்துவ மூலிகைகள், அரிசி, கோதுமை போன்ற முக்கிய பொருட்களின் மீதான மரபணு மாற்று ஆய்வுகளை தடை செய்ய வேண்டும்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக விவசாயிகள் சங்கம் (இ.உ.உ.கட்சி), தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, பூவுலகின் நண்பர்கள், தோழமை, கீரீன்பீஸ், தமிழ்நாடு தன்னார்வ நலக் குழுமம், , தமிழக விவசாயிகள் சங்கம்., தமிழ்நாடு விவசயிகள் சங்கம். ஈரோடு மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, இந்திய இயற்கை விவசாயிகள் இயக்கம்., சர்வோதைய இயக்கம்.

Friday, January 23, 2009

Protest Update

Media update of the protest on Jan 22nd 2009 at memorial hall.


The release of the book Genetic Roulette by Jeffrey.M.Smith happened at Hotel Kanchi, Egmore from 10 am to 1pm and was quite a success with farmers and women groups forming majority of the gathered, he touched upon his experiences with farmers who cultivated GM crops. He said what makes a GM crop very dangerous is that it is almost impossible to predict what will happen every time we shoot a gene into a plant/crop, as it is not yet a perfect science. The metabolism that results is totally out of our control and releasing it into nature is a the biggest crime man can do… he also spoke of the GM campaign in US that is gaining strength and will tip the scale any day. He spoke of how the anti-gm groups in US got shopping guides with Non-GM food printed and gave it to consumers. (Maybe something we could do too!!) According to a study conducted 9/10 Americans want GM labeling on their food, but the American companies were being pro-gm for just % major companies against 90% of Americans. But recently Obama has promised GM labeling (Here, the entire audience applauded with wide grins ????!!!)


For the Indian anti-GM movement, Jeffrey Smith thinks we should move our strategy in Political, Medical and Educational (Farmers, Consumers) mode. He also attended the initial few minutes of the Protest and filmed some parts for his documentary.


Protest at Memorial Hall on 22nd January between 4 and 6pm with Almost 200 farmers and activists turned up, though at different points of time and thus the entire strength didn't really show. We used the whistles, blowing in time with some firebrand slogans.


Ms.Sheelu from the Tamilnadu Women’s Collective and SAGE, Mr.Vellaiyan from Tamil Nadu Vanighar Sangangalin Peravai, Mr.Nammalvar, Indian organic farmers movement, Dr.Markandan, ex- vice chancellor, Gandhigram Rural University, Mr. Oswald Quintal from Kudumbam, and Jeffrey Smith were there straight from the book release event. Also present were Mr.Kannaiyan of Tamil Nadu farmers association, Mr.Selvam Erode district organic farmers collective, Mr.Vettavalam Manikandan of Tamil Nadu farmers association (Indian farmers and toilers party), Mr.Munusamy of Tamil Nadu Farmers association ( CPI (M)), Mr.Backer of Indian Thouheed Jama'at, Sundararajan from Poovulagin Nanbargal and Greenpeace.

Deccan Chronicle

The Indian Express


தினகரன்

Thursday, January 22, 2009

செய்தி: ஆர்ப்பாட்டம்

சென்னை, 22 ஜனவரி:

இந்தியாவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்களையும், பூச்சிமருந்துகளையும் அறிமுகம் செய்த வேளாண் அறிவியல் விஞ்ஞானிகளே ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் விவசாயிகளின் வாழ்வைப்பறித்து, அவற்றை தயாரித்த நிறுவனங்களை வாழவைப்பதாக ஒப்புக் கொள்கின்றனர்.


இந்நிலையில் அதே வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள், மரபணு மாற்ற உணவுப்பொருட்களை இந்தியாவில் திணிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


பயிர்களை அதிகமாக தாக்கக்கூடிய பூச்சிகளை கொல்லும் விஷப்பொருட்களை அந்த தாவரங்களின் மரபணுவில் பொருத்துவதையே மரபணு மாற்றம் என்று அழைக்கின்றனர். இதன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை தனியே பயன்படுத்த தேவையில்லை என்றும், ஏனெனில் அந்தப்பயிர் முழுவதுமே விஷத்தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால் அந்த விஷப்பொருட்கள், அந்த தானியங்களை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏராளமான ஆபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதை இந்த விஞ்ஞானிகள் சாமர்த்தியமாக மறைத்துள்ளனர்.

இத்தகைய ஆபத்தான மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரிசி, கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு, உளுந்து, துவரம்பருப்பு, கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பப்பாளி போன்ற 41க்கும் மேலான உணவுப்பொருட்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.


இத்தகைய ஆபத்தான பயிர்களை உருவாக்குவதில் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மான்சான்டோ என்ற பன்னாட்டு பகாசுர நிறுவனத்தின் கைக்கூலி நிறுவனமாகவே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மாறிவிட்டது.


தமிழர்களின் பாரம்பரிய அறிவுச்சொத்தான பல இயற்கை தானியங்களை வளர்த்தெடுக்காமல், அவற்றை அழித்தொழிக்கும் நோக்கதோடு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்பவர்களுக்கு அரிப்பு முதல் ஆண்மைக்குறைவுவரை பிரச்சனைகள் ஏற்படும் என்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் மனிதர்களின் பாதுகாப்பு குறித்த எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்று வெளிப்படையாகக் கூறும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கும் மரபணு மாற்று பயிர்களை உருவாக்கும் ஆய்வை அயராது மேற்கொண்டு வருகிறது.


குறிப்பாக தற்போது மான்சான்டோவின் முதல் உணவுப்பயிரான மக்காச்சோளத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அதன் நிலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரான வகையில் களப்பரிசோதனை செய்துவருகிறது.


தமிழர்களுக்கு விருப்பமான கத்தரிக்காயில் மரபணு மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மான் சான்டோ நிறுவனத்தின் இந்திய கூட்டாளியான மஹிகோ, சந்தையில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் Bt கத்தரிக்காய் மனிதர்களுக்கு மிகவும் ஏற்றது என்று கூறி வருகிறது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் மரபணு மாற்று அறநெறிக்குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய மூத்த விஞ்ஞானியான செரெலினி என்பவர் மஹிகோ நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் அனைத்தும் தவறானவை என்று நிரூபித்துள்ளார்.

நாகாலாந்து, மிசோரம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும், நமக்கு அண்டை மாநிலமான கேரளாவிலும் மரபணு மாற்று பயிர்களுக்கும், உணவுப்பொருட்களுக்கும் மற்றும் ஆய்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால் தமிழ்நாட்டில் அரசு சார்பு நிறுவனமான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமே மரபணு மாற்று ஆய்வுகளை முதன்மைப்பணியாக மேற்கொண்டு செயல்படுகிறது. இந்த மக்கள் விரோத நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

Tuesday, January 20, 2009

Invite: VOICE OUT protest

Join us to ‘VOICE OUT’ for safe and secure food


P R O T E S T


Time: 04.00pm,

Day: Thursday, 22nd January 2009

Venue: Memorial hall,

(near central railway station & G.H. hospital)


to declare

we will not allow any genetically engineered crops

in India.


Come, participate to protect the rights of farmers, traders and consumers.


THE SAFE FOOD ALLIANCE

Tamil Nadu Vanigar Sangangalin Peravai, Tamil Nadu womens Collective, Poovulagin Nanbargal, Thozhamai, Greenpeace, Tamil Nadu Voluntary Health Association.


The SAFE FOOD ALLIANCE is a network of organisations and individuals who want to stop GM food from being approved as safe , from consumers and farmers losing a choice, from the nation losing its food security forever and for protecting the health and safety of citizens.

Sunday, January 18, 2009

book launch by Jeffery M.Smith

Join us to ensure a future of safe and secure food

Genetically modified food is engineered by taking genes from bacteria, viruses and insects and forcibly inserting them into foods like rice, Brinjal potato, corn etc…


Genetically modified crops cause negative impacts on health starting from allergies to reproductive disorders, affects soil fertility, destroys biodiversity irreversibly by contamination, and ends the choice of farmers and consumers to choose safe food.


January 22nd 2009

Time: 10.30 am

Venue: Hotel Kanchi,

Ethiraj Salai, Egmore, Chennai.


with

Jeffrey M.Smith

at the occasion of the release of the Indian edition of his book ‘Genetic Roulette

(Courtesy: South Against Genetic Engineering / Tamil Nadu women’s collective)

Thursday, January 1, 2009

Launch: SAFE FOOD ALLIANCE

Concerned Citizens form Alliance on New Year's Eve; Declare to keep 2009 safe from Genetically Modified Food

Manifesto for 'Safe and secure food for all without Genetic Engineering' released

Chennai, 31st December 2008: In a very novel gesture of welcoming the new year, an association of physicians, lawyers, traders, human rights activists, farmers, consumers and academicians officially launched 'Safe Food Alliance', and held a candle light vigil at the Marina beach in the city taking an oath to keep the New Year 'GM food and crops' Free.

The vigil was part of the Alliance's campaign to assert every citizen's 'Right to safe Food and health.' "In the context of cattle deaths, dangers of causing toxicity and infertility, GM crops remain an underestimated danger to agriculture, economy and health. Bt Brinjal, the first Genetically Modified food crop in India is going to be commercialized in a few months without adequate studies that assure the safety of GM crops on health", said Vellaiyan from the traders association, Tamil Nadu Vanigar Sangam Peravai.

Earlier in the week eminent fertility experts of the city Dr.Kamala Selvaraj and Dr. Jayam Kannan, at a press conference had strongly asserted that GM should be banned as its health impacts could involve immune system and liver failure and also infertility. The alliance felt that the Indian Government was rushing into an outdated technology with improper understanding and haste. It has formed a manifesto and will approach political parties in the state and urge them to take a stand against GM and for safe and secure food for all.


"What is of utmost shame to the state is the fact that, while the Union Health Minister Anbumani Ramadoss hailing from Tamil Nadu takes such a progressive stand against GM food crops, hazardous GM trials are being conducted at Tamil Nadu Agricultural University in Coimbatore. Political parties in the state need to see this exploitation of the agro bio tech industry which will not only affect the health of the citizens but also the agriculture biodiversity of the state, irreversibly", said Jai Krishna from Greenpeace.

Renowned organic farmer and member of the alliance, Dr.Nammalvar said that a good food system should ensure safe and nourishing food for all people, while restoring the land and the livelihoods of the poor. "GM crops cannot provide more food for the hungry millions; it does not make food safe or nourishing and makes our soil infertile. It has been seen that GM cannot provide more profits for farmers, and is completely unsafe for health" he said while talking about the GM crop technology.

Film Director Vasant and Actress Rohini along with other members of the alliance took an oath not to let GM technology in the country in 2009 and released a manifesto that will be sent to all the political parties of the state as a note of precaution and concern against GM. The demands of the manifesto included that 'all GM approvals be stopped immediately and GM crops safety studies done appropriately.' It also stated that medicinal herbs, staple crops like rice and other culturally significant crops should be declared as NOT to be genetically engineered and that the State agricultural universities should disengage any partnership research on GM crops with any private companies.

For further Information contact

Jai Krishna – Greenpeace +91 98455 91992

Pughazhendi- Vanigar Sangam Peravai, +91 98419 06290

Sundarajan- Poovulagin Nanbargal +91 98402 46661