Wednesday, January 20, 2010

தலைகுனியுமா தமிழகம்?

தலைகுனியுமா தமிழகம்?

தென் இந்திய மாநிலங்களில் இயற்கையை பாதுகாப்பது முதல் விவசாயியின் உரிமையை காப்பது வரை 'நாங்கள் தான் முதலிடம்' என்று பெருமைப்பட்டு கொண்டிருக்கும் தமிழன் மரபீனி மாற்ற விதை களை தடை செய்வதில் மட்டும் ஏன் பின்தங்கி விட்டான்?

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்று கூறிய வள்ளுவனை அனுதினமும் நினைவூட்டி ஒவ்வொரு பேருந்து மற்றும் புத்தகத்திலும் அவன் குரளை எழுதவைத்த கலைஞர், தமிழ் உழவன் மாற்றானிடம் யாசித்து, விதை வாங்கி,பயிர் செய்ய ஒப்புதல் அழிப்பது வள்ளுவனை அவமதிப்பதாகாதா?

அண்டை மாநிலமான கேரளம் முதலில் தடை செய்தது, 'எங்கள் இயற்கை பாதிக்கப்படும்' என்று, சில நாட்களுக்கு முன்னால் ஆந்திரம் தடை செய்தது, 'எங்கள் விவசாயிகள் உரிமை போய்விடும்' என்று, இன்று கர்நாடகம் தடை செய்ய முடிவெடுத்துள்ளது, 'இது எங்களுக்கு பயன் தராது' என்று. இயற்க்கைக்கு ஒப்பவில்லை, விவசாயிக்கு எதிரானது, நுகர்வோருக்கு பயன் தராது என்றால் தமிழ் தலைவர்கள் ஏன் இன்னும் முடிவெடுக்க யோசிதுகொண்டிருக்கிரார்கள்??

No comments: